Posts

Showing posts from August, 2018

பெற்றோர் தேவையில்லை !! அவர்களின் சொத்து மட்டும் தேவையோ??

Image
பெற்றோரை கவனிக்கவில்லையா ? பிள்ளைகள் தங்களுக்கு பெற்றோர் தானமாக தந்த சொத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்.. ஒரு சமுதாயத்தில் பெண், வயதானனவர்கள், குழந்தைகள் போன்றோர் வலுவற்றவர்களாக கருதப்படுவதால் அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது.   அதனால் வலுவானவர்கள் வலுவற்றவர்களைக் கவனித்து கொள்ள வேண்டும் என்பதற்காக சட்டங்கள் இயற்றப்பட்டு இருக்கின்றன. இதில் குழந்தைகள், பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்பது தற்போது பெருகி வரும் விவாகரத்து பிரச்சினைகளால் அதிகம் தெரிய வருகிறது. ஆனால் பெற்றோர் விடயத்தில் பெரும்பாலும் நீதி மன்றம் வரை எதுவும் செல்லாததால் இருக்கிற சட்டம் அவ்வளவாக தெரிய வில்லை என்றும் சொல்லலாம். அண்மையில் மும்பையை சேர்ந்த ஒரு வயதான தம்பதி தொடர்ந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்ததை தொடர்ந்து இந்த சட்டத்தின் உள்ளடக்கம் வெளியே தெரிய வந்துள்ளது. இந்த வழக்கின் சாராம்சம் இது தான், வயதான தந்தை மும்பையில் தமக்கு சொந்தமான பிளாட்டின் 50% பங்கினை தமது மகனுக்கு எழுதிக் கொடுத்து விட்டார்.  ஆனால் அதன் பிறகு தமது மகனும், மருமகளும் தங்களை மோசமாக நடத்துவதாகவும், அதனால