Posts

கலைஞர் எழுதிய குறிப்புரை !

Image
கரூர் மாவட்ட ஆட்சியர் திரு பிரபு சங்கர் வேங்காம்பட்டி-ல் ஆய்வு மேற்கொண்ட போது .. அங்குள்ள பள்ளியில் 1959 ஆம் ஆண்டு குளித்தலை எம்எல்ஏ-வாக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் அந்த பள்ளியை ஆய்வு செய்தபின் எழுதிய குறிப்பை ஆட்சியர் பகிர்ந்துள்ளார்... அந்த குறிப்புரை புகைப்படம்  

14 நாட்கள் ஊரடங்கு ! எதெற்கெல்லாம் அனுமதி ? எதெற்கெல்லாம் அனுமதி இல்லை ?

தமிழக அரசின் புதிய முழு ஊரடங்கு 10/05/2021 முதல் 24/05/2021 வரை அமுல்படுத்தப்படுகிறது.. இந்த ஊரடங்கில் பொதுமக்களுக்கு எதெற்கெல்லாம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது ? எதெற்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி கீழே உள்ள நமது யூடியூப் வீடியோவின் மூலம் தெரிந்து கொள்வோம்.. https://youtu.be/er7Ep01CpIc இந்த வீடியோ பிடித்திருந்தால் லைக் , கமெண்ட் & சேர் செய்யுங்கள்.. நமது சேனலை இதுவரை Subscribe செய்யாதவர்கள் இந்த https://youtube.com/channel/UC61z-MlaHx4ejpf6IMdrfew  லிங்கை கிளிக் செய்து சப்ஸ்கிரைப் செய்து அருகில் உள்ள பெல் பட்டனை கிளிக் செயது All என்று கொடுத்து நம்முடன் இணைந்திருங்கள்.. நன்றி ! Albee's View 

SFI (எஸ்.எப்.ஐ) 50 ஆம் ஆண்டும் , நானும்..

Image
இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) 50 ஆம் ஆண்டு ! நானும் இந்திய மாணவர் சங்கத்தின் பயிற்சி பட்டறையில் அரசியல் பயின்றவன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.. கடந்த 2007 ல் எனது 19 ஆம் வயதில் சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் 2 ஆம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக் கொண்டிருந்த போது இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்தேன்.. அப்போது அண்ணன் பிரபு ஜீவன்   தான் மாவட்ட தலைவர். அதன் பிறகு முதல் போராட்டமே மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை உயர்த்திய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்திற்கு எதிராக தோழர் G.செல்வா தலைமையில் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் சென்று போராட்டம் நடத்தியது தான்.. நான் கலந்து கொண்ட முதல் போராட்டமே வெற்றி.. அதே போல் நான் சட்டம் பயில வேண்டும் என்ற ஆர்வமும் எனக்கு இந்திய மாணவர் சங்கத்தில் உருவானது தான்.. அந்த நேரம் பிஜேபி யின் ஏ.பி.வி.பி யை தளிர்விட கூட நாங்கள் அனுமதித்ததில்லை. மதவாத பிஜேபி யின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி(ABVP)  யினர் எவ்வளவோ முயற்சி செய்தாலும் கூட மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழக(MSU) மாணவர் பேரவை தேர்தலில் நாங்களே (SFI) முழுமையாக வெற்றியடைந்தோம். குமரி மாவட்டத்தை ச

மாணவருக்கு கல்விக்கடன் வழங்க மறுக்க கூடாது ! - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

Image
மாணவருக்கு கல்விக்கடன் வழங்க மறுக்க கூடாது ! கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்த கல்லூரி படிக்கும் V.பிரணவ் என்ற 20 வயது மாணவர் உயர்நீதிமன்றத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனக்கு கல்விக்கடன் வழங்க மறுப்பதாக கூறி ஒரு ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். SBI கடக்கல் பிராஞ்ச், கொல்லம் அந்த மனுவின் மீதான இறுதி விசாரனை கடந்த 03-07-2020 அன்று கேரள உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி அனுசிவராமன் அவர்களின் முன்பு வந்தது. அந்த மனுவை  விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டில் Kerala High Court in W.P. (C) 19248/2019 என்ற வழக்கின் உத்தரவில் கூறப்பட்டதை  " மனுதாரரின் தந்தைக்கு தேவையான கடன் மதிப்பெண்(சிபில் ஸ்கோர்) இல்லை என்ற அடிப்படையில் கடன் கோரிக்கையை நிராகரிப்பது தன்னிச்சையானது மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய சுற்றறிக்கையின் விதிமீறல் (மாதிரி கடன் திட்டத்தின் அடிப்படை) "ஆகும். கேரள உயர்நீதிமன்றம் மேற்கோள் காட்டி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ள மாணவர் V.பிரணவ் என்பவரின் கல்விக் கடன் விண்ணப்பத்தை அவருடைய பெற்றோரின் கடன் த

தமிழக அரசு இளம் வழக்கறிஞர்களுக்கு ₹3000/- உதவித் தொகை அறிவிப்பு !

Image
தமிழக அரசு இளம் வழக்கறிஞர்களுக்கு ₹3000/- உதவித் தொகை அறிவிப்பு !  வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவர்கள் பல ஆண்டுகளாக ஜனநாயக ரீதியில் போராடியும், தற்போது நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக போராடியுமே இந்த உரிமையை பெற முடிந்துள்ளது.. சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவு செய்த (Enrollment) வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகள் வரை மாதந்தோறும் ரூ.3000/- வழங்க தமிழக அரசு G.O.(Ms).No.246 தேதி 30-06-2020 ன் படி உத்தரவிட்டுள்ளது.. தமிழக முதல்வரின் அறிக்கை இது வழக்கறிஞர் படிப்பை முடித்து கஷ்டப்படும் இளம் வழக்கறிஞர்களின் நெருக்கடியை முழுவதுமாக தீர்க்காவிட்டாலும் ஓரளவாவது தீர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.. அதே போல் வழக்கறிஞராக பதிவு செய்தவுடன் வருமானத்திற்காக  கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதில் இருந்தும் இந்த உதவித் தொகை ஒரு குறிப்பிட்ட சதவீதம் இளம் வழக்கறிஞர்களை காக்கும்.. ஆனால் ரூ.3000/- என்பதை ரூ.5000/- ஆக உயர்த்தியும், 2 ஆண்டுகள் என்பதை 3 ஆண்டுகளாக அதிகப்படுத்தினாலும் வழக்கறிஞர் தொழில் மேலும் சிறக்கும். எனவே அதற்கான தமிழக அரசின் அறிவிப்பை எதிர்பார

அன்சாருல்லா வழக்கும் என்.ஐ.ஏ சோதனைகளும் !!

Image
அன்சாருல்லா வழக்கும் , என்.ஐ.ஏ சோதனைகளும் !! தற்போது தமிழ்நாட்டில் NIA (தேசிய  புலானாய்வு முகமை)  விசாரித்து வரும் வழக்கிற்கு அவர்கள் வைத்துள்ள பெயர் "தமிழ்நாடு அன்சாருல்லா வழக்கு" . கடந்த 09-07-19 அன்று என்.ஐ.ஏ Case RC-16/2019/NIA/DLI (Tamilnadu Ansarulla Case) ன்படி வழக்கு பதிவு செய்தது . அவ்வழக்கில் சென்னையை சேர்ந்த செய்யது முகம்மது புகாரி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த ஹசன் அலி 2 வது குற்றவாளியாகவும், அதே ஊரை சேர்ந்த  ஹாரிஸ் முகம்மது 3 வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்ட (இபிகோ) குற்றப்பிரிவுகள் 120(B) , 121A, 122 மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்(உபா) பிரிவுகள் 17,18, 18-B, 38 மற்றும் 39 ஆகிய பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்கு பதிவு செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவில் " அன்சாருல்லா " என்ற அமைப்பை ஏற்படுத்தி இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தில் இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வரவும் , அதற்காக நிதி வசூலித்ததாகவும் என்.ஐ.ஏ குறிப்பிட்டுள்ளது. என்.ஐ.ஏ

நோன்புக்_கஞ்சியும் !! மோதினாரும் !! (சிறுகதை)

Image
நோன்புக்_கஞ்சியும் !! மோதினாரும் !! (சிறுகதை) அந்தப் பள்ளிவாசலில் நோன்பு காலத்தில் அசர் தொழுகை முடிந்தவுடன் மோதினாருக்கு  முக்கிய வேலை ஒன்றை அந்த ஜமாத் நிர்வாகம் ஒதுக்கியிருந்தது.. அதாவது ஏழைகள் / பெண்கள்  போன்றோர் வீட்டில் நோன்பு திறக்க பார்சல் நோன்பு கஞ்சி வாங்க ஒரு கூட்டம் வந்து வரிசையில் நிற்பார்கள்... அப்படி வரிசையில் நிற்பவர்களுக்கு  அவர்கள் கொண்டு வரும் பாத்திரங்களில் கஞ்சி ஊத்திக் கொடுப்பது தான் அந்த வேலை ... கஞ்சி ஊத்தும் போது தலைவர் மோதினாருக்கு  கொடுத்த கட்டளைப் படி ஒவ்வொருவருக்கும்  2 அல்லது 3 கரண்டி கஞ்சி ஊத்திக் கொண்டிருந்தார் மோதினார் ... அப்போது ஒரு பள்ளிவாசலில் அசர் தொழுதுவிட்டு கஞ்சி வாங்கிய காஜா பாய்... மோதினாரிடம் இன்னும் கொஞ்சம்  ஊத்துங்க , வீட்டுக்கு வெளியூர்ல இருந்த  ஆள் வந்திருக்காங்க என்று சொல்லவும் , மோதினார் சற்றும் தாமதிக்காமல் நோன்பு திறக்க வர்ரவங்களுக்கு கஞ்சி வேணும் பாய் , தட்டுப்பாடு ஆயிட்டுனா தலைவர் என்னைய தான் திட்டுவார், நீங்க வேனும்னா தலைவர் கிட்ட ஒரு வார்த்தை கேளுங்க அவர் சொன்னா கூட கொஞ்சம் கஞ்சி ஊத்துறேன்  என்று   சொல்லிக் கொண்டே