Posts

Showing posts from 2019

அன்சாருல்லா வழக்கும் என்.ஐ.ஏ சோதனைகளும் !!

Image
அன்சாருல்லா வழக்கும் , என்.ஐ.ஏ சோதனைகளும் !! தற்போது தமிழ்நாட்டில் NIA (தேசிய  புலானாய்வு முகமை)  விசாரித்து வரும் வழக்கிற்கு அவர்கள் வைத்துள்ள பெயர் "தமிழ்நாடு அன்சாருல்லா வழக்கு" . கடந்த 09-07-19 அன்று என்.ஐ.ஏ Case RC-16/2019/NIA/DLI (Tamilnadu Ansarulla Case) ன்படி வழக்கு பதிவு செய்தது . அவ்வழக்கில் சென்னையை சேர்ந்த செய்யது முகம்மது புகாரி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த ஹசன் அலி 2 வது குற்றவாளியாகவும், அதே ஊரை சேர்ந்த  ஹாரிஸ் முகம்மது 3 வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்ட (இபிகோ) குற்றப்பிரிவுகள் 120(B) , 121A, 122 மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்(உபா) பிரிவுகள் 17,18, 18-B, 38 மற்றும் 39 ஆகிய பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்கு பதிவு செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவில் " அன்சாருல்லா " என்ற அமைப்பை ஏற்படுத்தி இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தில் இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வரவும் , அதற்காக நிதி வசூலித்ததாகவும் என்.ஐ.ஏ குறிப்பிட்டுள்ளது. என்.ஐ.ஏ

நோன்புக்_கஞ்சியும் !! மோதினாரும் !! (சிறுகதை)

Image
நோன்புக்_கஞ்சியும் !! மோதினாரும் !! (சிறுகதை) அந்தப் பள்ளிவாசலில் நோன்பு காலத்தில் அசர் தொழுகை முடிந்தவுடன் மோதினாருக்கு  முக்கிய வேலை ஒன்றை அந்த ஜமாத் நிர்வாகம் ஒதுக்கியிருந்தது.. அதாவது ஏழைகள் / பெண்கள்  போன்றோர் வீட்டில் நோன்பு திறக்க பார்சல் நோன்பு கஞ்சி வாங்க ஒரு கூட்டம் வந்து வரிசையில் நிற்பார்கள்... அப்படி வரிசையில் நிற்பவர்களுக்கு  அவர்கள் கொண்டு வரும் பாத்திரங்களில் கஞ்சி ஊத்திக் கொடுப்பது தான் அந்த வேலை ... கஞ்சி ஊத்தும் போது தலைவர் மோதினாருக்கு  கொடுத்த கட்டளைப் படி ஒவ்வொருவருக்கும்  2 அல்லது 3 கரண்டி கஞ்சி ஊத்திக் கொண்டிருந்தார் மோதினார் ... அப்போது ஒரு பள்ளிவாசலில் அசர் தொழுதுவிட்டு கஞ்சி வாங்கிய காஜா பாய்... மோதினாரிடம் இன்னும் கொஞ்சம்  ஊத்துங்க , வீட்டுக்கு வெளியூர்ல இருந்த  ஆள் வந்திருக்காங்க என்று சொல்லவும் , மோதினார் சற்றும் தாமதிக்காமல் நோன்பு திறக்க வர்ரவங்களுக்கு கஞ்சி வேணும் பாய் , தட்டுப்பாடு ஆயிட்டுனா தலைவர் என்னைய தான் திட்டுவார், நீங்க வேனும்னா தலைவர் கிட்ட ஒரு வார்த்தை கேளுங்க அவர் சொன்னா கூட கொஞ்சம் கஞ்சி ஊத்துறேன்  என்று   சொல்லிக் கொண்டே

உள்ளாட்சித் தேர்தலும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியும் !!

Image
உள்ளாட்சித் தேர்தலும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியும் !! தமிழகத்தில் கடந்த 2016 ஆம் சட்டமன்ற தேர்தல் நடந்த பிறகு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடத்தப்படவில்லை... இந்நிலையில் உள்ளாட்சித்  தேர்தல்  நடத்துவதற்காக தற்போது தமிழகம் முழுவதும் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது... திருநெல்வேலி மாநகராட்சியில் பாளை, நெல்லை, தச்சை, மேலப்பாளையம் என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது... இதில் கடந்த தேர்தல் வரை மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்டு 14 வார்டுகள் இருந்து வந்தது. இதில் மேலப்பாளையம் ஊருக்குள் 8 வார்டுகள் அடங்கும். இந்த 8 வார்டுகளில் முஸ்லிம் வாக்காளர்களே 95% பேர் இருந்து வந்தார்கள். அதனால் எந்த கட்சியாக இருந்தாலும் முஸ்லிம் வேட்பாளர்கள் தான் போட்டியிட்டார்கள். வெற்றியும் பெற்றார்கள். மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள 14 வார்டுகளில் , 8 வார்டுகளில் வெற்றி பெறும் கவுன்சிலர்கள்  தேர்ந்தெடுக்கும் நபரே மண்டல தலைவர் (சேர்மன்) ஆக பதவி வகிப்பார்... அதே போல் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் முஸ்லிம் தான் சேர்மனாக வர முடியும்...