Posts

Showing posts from 2018

பெற்றோர் தேவையில்லை !! அவர்களின் சொத்து மட்டும் தேவையோ??

Image
பெற்றோரை கவனிக்கவில்லையா ? பிள்ளைகள் தங்களுக்கு பெற்றோர் தானமாக தந்த சொத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்.. ஒரு சமுதாயத்தில் பெண், வயதானனவர்கள், குழந்தைகள் போன்றோர் வலுவற்றவர்களாக கருதப்படுவதால் அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது.   அதனால் வலுவானவர்கள் வலுவற்றவர்களைக் கவனித்து கொள்ள வேண்டும் என்பதற்காக சட்டங்கள் இயற்றப்பட்டு இருக்கின்றன. இதில் குழந்தைகள், பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்பது தற்போது பெருகி வரும் விவாகரத்து பிரச்சினைகளால் அதிகம் தெரிய வருகிறது. ஆனால் பெற்றோர் விடயத்தில் பெரும்பாலும் நீதி மன்றம் வரை எதுவும் செல்லாததால் இருக்கிற சட்டம் அவ்வளவாக தெரிய வில்லை என்றும் சொல்லலாம். அண்மையில் மும்பையை சேர்ந்த ஒரு வயதான தம்பதி தொடர்ந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்ததை தொடர்ந்து இந்த சட்டத்தின் உள்ளடக்கம் வெளியே தெரிய வந்துள்ளது. இந்த வழக்கின் சாராம்சம் இது தான், வயதான தந்தை மும்பையில் தமக்கு சொந்தமான பிளாட்டின் 50% பங்கினை தமது மகனுக்கு எழுதிக் கொடுத்து விட்டார்.  ஆனால் அதன் பிறகு தமது மகனும், மருமகளும் தங்களை மோசமாக நடத்துவதாகவு...

மாற்றுத் திறனாளி சிறுமி கற்பழிப்பு

Image
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத தேசம்!!  சென்னை அயனாவரத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வாய் பேச முடியாத ,காது கேட்காத 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை அந்த அபார்ட்மென்ட் டில் வேலை செய்யும் தனியார் செக்யூரிட்டி சர்வீசை சேர்ந்த 24 மிருகங்கள் சேர்ந்து கடந்த 7 மாதமாக கற்பழித்துள்ளனர்... இதில் அக்குழந்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்...7 மாத கைக் குழந்தையை கற்பழிக்கும் மிருகங்கள் உள்ள இந்த தேசத்தில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவியை விடவா செய்வார்கள்... இந்தக் கயவர்கள் மீது காவல்துறை பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர்... ஆனால் உரிமைகளுக்காகப் போராடும் மாற்றுத்திறனாளகள் மீது தடியடி நடத்தும் நம் அரசும், காவல்துறையும் நியாயமான நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்... கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய தேசம் முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது... அப்படி என்றால் POSCO, TNPWH ,DV  போன்ற சட்டங்களும்,மகிள...

பலஸ்தீன் வெல்லுமா ??

Image
பலஸ்தீன் வெல்லுமா ??? பலஸ்தீன் மக்கள் தங்களுடைய நாட்டை யூதர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து இன்று வசிக்க நிலம் இல்லாமல் இருக்கிறார்கள்.. இந்நிலையில் அந்நாட்டு சிறுவர்கள் மற்றும் பெண்களை யூத இஸ்ரேல்  ராணுவத்தினர் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கிறார்கள்...யூதர்கள் சிறுவர்களை அதிகமாக கொல்வதற்கு காரணம் அவர்கள் வளர்ந்து இஸ்ரேலிய யூதர்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடக்கூடாது என்பதற்காகத் தான்...அதே போல் பெண்களை கொல்வதன் நோக்கம் என்னவென்றால் பலஸ்தீனப் பெண்கள் ஆண் பிள்ளை பெற்றெடுத்தால் அந்த பிள்ளைகள் எதிர்காலத்தில் தங்களுடைய அநியாயத்திற்கு எதிராக போராடுவார்கள் என்பதால் ... உலகிலேயே அதிகமாக மனித உரிமை மீறல்கள் நடக்கிறது என்றால் அது பலஸ்தீனத்தில் தான் இருக்கும்...அதை நடத்துபவர்கள் இஸ்ரேலிய யூதர்கள்...அதில் பாதிக்கப்படுபவர்கள் பலஸ்தீனத்து இஸ்லாமியர்கள்... இஸ்லாமியர்கள் மீதான யூதர்களின் இந்த தாக்குதல்களை அமெரிக்காவும், ஐ.நா சபையும் வாய்மூடி ,கண் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்... அப்படியே ஐ.நா சபை எப்போதாவது இஸ்ரேலுக்கு எதிராக வாய் திறந்தாலும் கூட அமெரிக்கா உட...