மாற்றுத் திறனாளி சிறுமி கற்பழிப்பு

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத தேசம்!! 


சென்னை அயனாவரத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வாய் பேச முடியாத ,காது கேட்காத 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை அந்த அபார்ட்மென்ட் டில் வேலை செய்யும் தனியார் செக்யூரிட்டி சர்வீசை சேர்ந்த 24 மிருகங்கள் சேர்ந்து கடந்த 7 மாதமாக கற்பழித்துள்ளனர்...

இதில் அக்குழந்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்...7 மாத கைக் குழந்தையை கற்பழிக்கும் மிருகங்கள் உள்ள இந்த தேசத்தில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவியை விடவா செய்வார்கள்...

இந்தக் கயவர்கள் மீது காவல்துறை பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர்...


ஆனால் உரிமைகளுக்காகப் போராடும் மாற்றுத்திறனாளகள் மீது தடியடி நடத்தும் நம் அரசும், காவல்துறையும் நியாயமான நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய தேசம் முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது...

அப்படி என்றால் POSCO, TNPWH ,DV  போன்ற சட்டங்களும்,மகிளா(மகளிர்) நீதிமன்றங்களும், அனைத்து மகளிர் காவல்நிலையங்களும் இருந்து யாருக்கு என்ன பயன் ??

ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒருபெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 

பெண்கள் பாதுகாப்பு மிகவும் மோசமாக உள்ள நாடுகளில் நம் நாட்டிற்குதான் முதலிடம் என்று செய்தி வந்துள்ளது...விருது மட்டும் தான் கொடுக்கவில்லை..

பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க முடியாத நம் அரசு வல்லரசு கணவு காண்பது வேடிக்கையானது....

வழக்கறிஞர் அல்பி.நிஜாம்
திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

கலைஞர் எழுதிய குறிப்புரை !

14 நாட்கள் ஊரடங்கு ! எதெற்கெல்லாம் அனுமதி ? எதெற்கெல்லாம் அனுமதி இல்லை ?

தமிழக அரசு இளம் வழக்கறிஞர்களுக்கு ₹3000/- உதவித் தொகை அறிவிப்பு !