உள்ளாட்சித் தேர்தலும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியும் !!


உள்ளாட்சித் தேர்தலும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியும் !!


தமிழகத்தில் கடந்த 2016 ஆம் சட்டமன்ற தேர்தல் நடந்த பிறகு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடத்தப்படவில்லை...

இந்நிலையில் உள்ளாட்சித்  தேர்தல்  நடத்துவதற்காக தற்போது தமிழகம் முழுவதும் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது...

திருநெல்வேலி மாநகராட்சியில் பாளை, நெல்லை, தச்சை, மேலப்பாளையம் என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது...

இதில் கடந்த தேர்தல் வரை மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்டு 14 வார்டுகள் இருந்து வந்தது.

இதில் மேலப்பாளையம் ஊருக்குள் 8 வார்டுகள் அடங்கும்.
இந்த 8 வார்டுகளில் முஸ்லிம் வாக்காளர்களே 95% பேர் இருந்து வந்தார்கள். அதனால் எந்த கட்சியாக இருந்தாலும் முஸ்லிம் வேட்பாளர்கள் தான் போட்டியிட்டார்கள். வெற்றியும் பெற்றார்கள்.

மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள 14 வார்டுகளில் , 8 வார்டுகளில் வெற்றி பெறும் கவுன்சிலர்கள்  தேர்ந்தெடுக்கும் நபரே மண்டல தலைவர் (சேர்மன்) ஆக பதவி வகிப்பார்...

அதே போல் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் முஸ்லிம் தான் சேர்மனாக வர முடியும்...
சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இவ்வாறு தான் நடந்து வருகிறது...

மேற்படி 4 மண்டலத்தில் மேலப்பாளையம் மண்டலத்தில்  மட்டுமே சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இந்த உரிமை கிடைத்து வந்தது...

இதை பொறுத்துக்கொள்ள முடியாத திருநெல்வேலி மாநகராட்சியில் வேலை பார்க்கும் ஒரு சில அதிகாரிகள் வார்டு மறுவரை செய்யும் போது முஸ்லிம்களுக்கு கிடைத்து வந்த இந்த உரிமையை பறிக்கும் விதத்தில் வார்டு மறுவரையறை செய்துள்ளனர்.

மேலப்பாளையம் மண்டலத்தில் 15 வார்டுகளாக (முன்பு 14)  அதிகரித்தும், மேலப்பாளையம் ஊருக்குள் 7 வார்டுகளாக (முன்பு 8) குறைத்தும் அநீதி இழைத்துள்ளனர்...

இதனால் என்ன அநீதி என்று கேட்கிறீர்களா ??

அதாவது 15 வார்டுகளில், 8 வார்டுகளின்  கவுன்சிலர்கள் தேர்ந்தெடுப்பவர் தான் #சேர்மனாக வர முடியும்...

அப்படியென்றால் மேலப்பாளையத்தில் இருந்து 7 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும்  வெற்றி பெற்றாலும் முஸ்லிம்களால் இனி சேர்மனை தேர்ந்தெடுக்க முடியாது என்ற நிலையையும் , முஸ்லிம் இனி சேர்மனாக வரவும் முடியாது என்ற நிலையையும் உருவாக்கியுள்ளார்கள்..

மேலும் மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள ஆனால் மேலப்பாளையம் ஊருக்கு வெளியே ,

வார்டு எண்கள் : 40 முதல் 43 வரை
வார்டு எண்கள் : 51 முதல் 54 வரை

மொத்தம்  : 8 வார்டுகளும்,

மேலப்பாளையத்திற்கு உள்ளே

வார்டு எண்கள் :  44 முதல் 50 வரை

மொத்தம் : 7 வார்டுகளும் ஆக மொத்தம் 15 வார்டுகளாக மறுவரையறை செய்துள்ளனர்...

இதில் மேலப்பாளையம் ஊருக்கு வெளியே உள்ள 8 வார்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் - 41,766  வாக்காளர்கள் மட்டுமே ...

அதாவது சராசரியாக ஒரு வார்டுக்கு 5220 வாக்காளர்கள் மட்டுமே சேர்த்துள்ளனர்.
( அதிகபட்சமாக 53 வது வார்டில்  5923 வாக்காளர்களும் , குறைந்தபட்சமாக 41 வது வார்டில் 2734 வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்)

ஆனால் மேலப்பாளையம் ஊருக்குள் உள்ள 7 வார்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 61076  வாக்களார்கள் சேர்த்துள்ளனர் ..

அதாவது சராசரியாக ஒரு வார்டுக்கு 8815 வாக்காளர்கள் சேர்த்துள்ளனர்.
(அதிகபட்சமாக 47 வது வார்டில் 9986 வாக்காளர்களும் , குறைந்தபட்ச மாக 46 வது வார்டில் 8733 வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர் )

மேலப்பாளையம் ஊருக்கு வெளியே வார்டுகளில் குறைந்த பட்ச வாக்காளர்களைக் கொண்டு மறுவரையறை செய்தது போல் (சராசரியாக 5220 வாக்காளர்கள்)  மேலப்பாளையம் ஊருக்குள்ளும் வார்டு மறுவரையறை செய்திருந்தால் மேலப்பாளையம் ஊருக்குள் 12 வார்டுகளாக உயர்த்தி இருக்க வேண்டும்..

ஆனால் 12 வார்டுகள் இருக்க வேண்டிய மேலப்பாளையத்திற்கு 7 வார்டுகள் மட்டுமே கொடுத்து அதிகமாக முஸ்லிம் பிரதிநிதிகள் வருவதை தடுத்துள்ளனர்.

திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரிகள் தயாரித்துள்ள மறுவரையறை பட்டியல் மேலப்பாளையத்தில் வாழும் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் மாநகராட்சிக்குட்பட்ட 55 வார்டுகளிலும் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்...

ஒரு மாநகராட்சிக்கே இப்படியென்றால் தமிழகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் நிலை என்னவாகயிருக்கும் ??

விழித்தெழு சகோதரா !!
உரிமையை மீட்டெடுப்போம் !!

தோழமையுடன்,

வழக்கறிஞர் அல்பி நிஜாம்
திருநெல்வேலி

Comments

Popular posts from this blog

கலைஞர் எழுதிய குறிப்புரை !

14 நாட்கள் ஊரடங்கு ! எதெற்கெல்லாம் அனுமதி ? எதெற்கெல்லாம் அனுமதி இல்லை ?

தமிழக அரசு இளம் வழக்கறிஞர்களுக்கு ₹3000/- உதவித் தொகை அறிவிப்பு !