மாணவருக்கு கல்விக்கடன் வழங்க மறுக்க கூடாது ! - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவருக்கு கல்விக்கடன் வழங்க மறுக்க கூடாது !


கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்த கல்லூரி படிக்கும் V.பிரணவ் என்ற 20 வயது மாணவர் உயர்நீதிமன்றத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனக்கு கல்விக்கடன் வழங்க மறுப்பதாக கூறி ஒரு ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

SBI கடக்கல் பிராஞ்ச், கொல்லம்

அந்த மனுவின் மீதான இறுதி விசாரனை கடந்த 03-07-2020 அன்று கேரள உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி அனுசிவராமன் அவர்களின் முன்பு வந்தது.

அந்த மனுவை  விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டில் Kerala High Court in W.P. (C) 19248/2019 என்ற வழக்கின் உத்தரவில் கூறப்பட்டதை 

" மனுதாரரின் தந்தைக்கு தேவையான கடன் மதிப்பெண்(சிபில் ஸ்கோர்) இல்லை என்ற அடிப்படையில் கடன் கோரிக்கையை நிராகரிப்பது தன்னிச்சையானது மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய சுற்றறிக்கையின் விதிமீறல் (மாதிரி கடன் திட்டத்தின் அடிப்படை) "ஆகும்.

கேரள உயர்நீதிமன்றம்

மேற்கோள் காட்டி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ள மாணவர் V.பிரணவ் என்பவரின் கல்விக் கடன் விண்ணப்பத்தை அவருடைய பெற்றோரின் கடன் திரும்ப செலுத்துதல் (சிபில்) மதிப்பெண்கள் திருப்தியற்றதாக இருப்பதால் மட்டும் நிராகரிக்க முடியாது என்றும் 2 வாரங்களுக்குள் வங்கி மேற்படி லோன் விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் நீதிபதி அனுசிவராமன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Source : WP(C).No :10968 OF 2020(U)
கேரள உயர்நீதிமன்றம்
03-07-2020

இந்த உத்தரவு நாடு முழுவதும் கல்விக்கடன் கிடைக்காமல் படிக்க முடியாமல் பரிதவிக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nizam Law Associates
திருநெல்வேலி 
96 55 77 77 96

Comments

Popular posts from this blog

கலைஞர் எழுதிய குறிப்புரை !

தமிழக அரசு இளம் வழக்கறிஞர்களுக்கு ₹3000/- உதவித் தொகை அறிவிப்பு !

14 நாட்கள் ஊரடங்கு ! எதெற்கெல்லாம் அனுமதி ? எதெற்கெல்லாம் அனுமதி இல்லை ?