SFI (எஸ்.எப்.ஐ) 50 ஆம் ஆண்டும் , நானும்..

இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) 50 ஆம் ஆண்டு !

நானும் இந்திய மாணவர் சங்கத்தின் பயிற்சி பட்டறையில் அரசியல் பயின்றவன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்..


கடந்த 2007 ல் எனது 19 ஆம் வயதில் சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் 2 ஆம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக் கொண்டிருந்த போது இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்தேன்..

அப்போது அண்ணன் பிரபு ஜீவன்  தான் மாவட்ட தலைவர். அதன் பிறகு முதல் போராட்டமே மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை உயர்த்திய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்திற்கு எதிராக தோழர் G.செல்வா தலைமையில் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் சென்று போராட்டம் நடத்தியது தான்..

நான் கலந்து கொண்ட முதல் போராட்டமே வெற்றி..

அதே போல் நான் சட்டம் பயில வேண்டும் என்ற ஆர்வமும் எனக்கு இந்திய மாணவர் சங்கத்தில் உருவானது தான்..

அந்த நேரம் பிஜேபி யின் ஏ.பி.வி.பி யை தளிர்விட கூட நாங்கள் அனுமதித்ததில்லை. மதவாத பிஜேபி யின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி(ABVP)  யினர் எவ்வளவோ முயற்சி செய்தாலும் கூட மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழக(MSU) மாணவர் பேரவை தேர்தலில் நாங்களே (SFI) முழுமையாக வெற்றியடைந்தோம். குமரி மாவட்டத்தை சேர்ந்த தோழர் சாம்ராஜ் பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்..

அதன் பிறகு நான் நெல்லை அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்த பின்னர் அந்த கிளையின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.அப்போது சட்டக் கல்லூரியில் எனது சீனியர் தோழர் உச்சிமாகாளி  மாவட்ட தலைவர். சட்டக் கல்லூரி SFI யின் கோட்டையாக மாறியது. அது வரை மொத்தமே 6 அடி உயரம் இருந்த எங்களின் மாணவர் சங்க கொடியை அகற்றி விட்டு பெரிய கல்வெட்டுடன் கூடிய கொடி வானுயர பறக்க விடப்பட்டது.

தினம் தினம் மாணவர்களின் நலனுக்கான போராட்டம் தொடர்ந்தது. சட்ட மாணவர்கள் மட்டுமல்லாமல் கலை, அறிவியல், பொறியியல் உட்பட அனைத்து மாணவர்களுக்காகவும் சட்டக் கல்லூரி மாணவர்களை கல்லூரிக்கு வெளியே வந்து போராட செய்தது எங்களின் சட்டக் கல்லூரி கிளை தான்..

அப்போது நாங்கள் நடத்திய போராட்டங்களில் ஒன்று  மிக முக்கியமானது.என்னவென்றால்  சட்டம் படித்து முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு மாதந்தோறும்  உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது. அது தற்போது சாத்தியமாகியுள்ளது. ஆம் இளம் வழக்கறிஞர்களுக்கு முதல் 3 ஆண்டுகள் மாதம் 5000/- ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..

அதன் பிறகு நான் SFI யின் நெல்லை மாநகர செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது மாநில செயலாளராக தோழர் ரெஜீஷ் குமார் இருந்தார்..

மாநகர தலைவனாக இருந்த தோழன் சங்கை.பேச்சிமுத்துவுடன் சேர்ந்து சாப்பிடாமல், தூங்காமல் பல நாட்கள் அலைந்து அனைத்து பள்ளி, கல்லூரிகளலும் இந்திய மாணவர் சங்கத்தை பலப்படுத்தினோம்..

அப்போது எங்களுடைய மாணவர் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்தவர் தற்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் தோழர் KG பாஸ்கரன் அவர்களுடைய ஊக்குவிப்பும், 

தற்போது டெல்லி போராட்டத்தை முன்னின்று நடத்தும் தோழர்களில் ஒருவரும், CITU - சி.ஐ.டி.யு அகில இந்திய பொதுச் செயலாளருமான தோழர் கருமலையான் அவர்களின் ஆதரவும் எனது போராட்ட குணத்தை மேலும் அதிகப்படுத்தியது...

நெல்லையில் நாங்கள் சென்று போராடாத கல்லூரிகளே இல்லை என்று சொல்லலாம். உரிமைக்காக எங்களின் கால்கள் தொடர்ந்து பயணித்தது.

எனது வாழ்வில் இந்திய மாணவர் சங்கம் வாழ்க்கை அனுபவமாகவும், எனது வாழ்வின் அடையாளமாகவும் ஆனது..

எனது பயிற்சி பள்ளிக்கு (SFI) வயது 50 !

SFI இன்னும் பல மாணவப் போராளிகளை உருவாக்கி இந் நாட்டை கல்வி மற்றும் வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையில்...

தோழன் அல்பி நிஜாம்
வழக்கறிஞர்.

Comments

Popular posts from this blog

கலைஞர் எழுதிய குறிப்புரை !

தமிழக அரசு இளம் வழக்கறிஞர்களுக்கு ₹3000/- உதவித் தொகை அறிவிப்பு !

14 நாட்கள் ஊரடங்கு ! எதெற்கெல்லாம் அனுமதி ? எதெற்கெல்லாம் அனுமதி இல்லை ?